இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. இப்படத்தில் இவருடன் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதேபோல், பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் அப்பாவான யோகராஜ் சிங், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்ற இந்தியன் 2 ஷூட்டிங்கில் 1920ம் ஆண்டுகளில் இருப்பது போல் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாம். இதுதான் இந்தியன் 2 படத்தில் கமலின் ப்ளாஷ்பேக் காட்சிகள் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் ஒரு வெயிட்டான வில்லன் கேரக்டர் உள்ளதாம். அதில் சத்யராஜை நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் விரும்பியுள்ளாராம்.அதனையடுத்து சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ஷங்கர்.ஆனால், சத்யராஜ் கோடிகளில் சம்பளம் கேட்டதாகாவும், அதனால் ஷங்கர் அதிர்ச்சியில் பின் வாங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இருப்பினும் எப்படியாவது சத்யராஜை வில்லன் கேரக்டரில் நடிக்க வைத்துவிட வேண்டும் என ஷங்கர் உறுதியாக இருக்கிறாராம். ஏற்கனவே ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் சத்யராஜை வில்லனாக நடிக்க வைக்க ஷங்கர் முயற்சி எடுத்துள்ளார். அப்போது சம்பள பிரச்சினை மட்டும் இல்லாமல் வில்லனாக நடிக்க சத்யராஜ் மறுத்துவிட்டாராம்.
அதனால்தான் சிவாஜியில் 80ஸ் ஹீரோ சுமனை கமிட் செய்தார் ஷங்கர். இந்நிலையில், இப்போது இந்தியன் 2 படத்திற்கு அதுபோல சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதால், சத்யராஜிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!