• Sep 21 2024

நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த இயக்குநர் ஷங்கர்-இது தான் விசயமா..?அவரே பதிவிட்ட புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலமே தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானவர்.இவர் தமிழ், பாலிவூட், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் வங்காளம் என பல மொழிகளில் ஏறக்குறைய 170 படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் ரஜினி மற்றும் இயக்குநர் ஷங்கர், இவர்கள் இவரும் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் பெரிய வெற்றியை அடைந்துள்ளன.

அதன்படி சிவாஜி தி பாஸ், எந்திரன், 2.0 உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். அத்தோடு இந்த மூன்று திரைப்படங்களும் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வெற்றி அடைந்துள்ளன.

இதனிடையே இவர்கள் கூட்டணியில் முதல்முறையாக வெளியான திரைப்படம் சிவாஜி, அப்படம் வெளியாகி இன்றுடன் 15 வருடங்கள் ஆகியுள்ளன. அதன் கொண்டாட்டமாக ரசிகர்கள் ஏற்கனவே பதிவுகளை வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

எனினும் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படி இயக்குநர் ஷங்கரே நடிகர் ரஜினியை நேரில் சந்திதுள்ளார். சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகியுள்ளதை கொண்டாடும் வகையில் இந்த சந்திப்பு நடந்ததாகவும அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி ஷங்கர் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement