• Sep 20 2024

சூர்யாவை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று அஜித்திடம் சென்ற இயக்குநர் சிறுத்தை சிவா- அட இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பல இயக்குநர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் சிறுத்தை, வீரம், விவேகம், விஸ்வாசம் ,அண்ணாத்த ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் தான் சிறுத்தை சிவா. இவர் இறுதியாக ரஜினியை வைத்து இயக்கிய அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அடுத்தாக சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சிறுத்தை சிவா கூறிய கதையில் சூர்யா பல முறை மாற்றம் செய்ய சொல்லியுள்ளாராம். இதனால் சிறுத்தை சிவா அஜித்திடம் ஒரு கதையை கூறி அவரை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் சூர்யா தற்போது பாலா இயக்கும் ஒரு படத்திலும் வாடிவாசல் படத்திலும் சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படங்களை முடித்த பிறகே சிறுத்தை சிவாவிற்கு கால்ஷீட் கொடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement