இந்திய திரையுலக திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு இந்திய தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார் விஜய் ஆண்டனி.
இவர் தற்போது பிச்சைக்காரன் 2ம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார். முதல் பாகம் பெரிய ஹிட் ஆன நிலையில் இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக அவரே இயக்கி வருகிறார்.
இந்நிலையில் மலேசியாவில் இந்த படத்தின் பாடல் காட்சிக்காக அவர் கடலில் ஜெட் ஸ்கி ஓட்டி சென்றபோது அவர் விபத்தில் சிக்கினார். அதில் தலை, முகத்தில் காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வந்திருந்தது.
மேலும் நேற்று அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை நடந்ததாக செய்தி வெளியானது. இந்த தகவலால் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிரார்கள்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி உடல்நிலை பற்றி இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். விஜய் ஆண்டனி சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.
அவர் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்து இருக்கின்றனர். விரைவில் அவர் ரசிகர்களிடம் வீடியோவில் பேசுவார். அவர் பற்றி பரவும் வதந்திகளை நம்பவேண்டாம்" என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!