• Nov 14 2024

வாரிசு படத்தை பார்த்து நெகிழ்ந்து மகனை கட்டிப்பிடித்த இயக்குநர் வம்சியின் தந்தை- ஆனந்த கண்ணீர் வடித்த குடும்பம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் முதன் முறையாக நேரடியாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்து வெளியாகிய திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தில் இவருடன்  சரத்குமார், ஜெயசுதா,ஷியாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,சங்கீதா,ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, பிரபு, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

 விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு கூட்டுக்குடும்ப கதையில் நடித்துள்ளார். அப்பா சரத்குமாரிடம் சண்டை போட்டுக் கொண்டு ஏழு ஆண்டுகளாக வீட்டிற்கு வராமல் குடும்பத்தினரை பிரிந்து இருக்கிறார் விஜய். திடீரென சரத்குமாருக்கு உடல்நிலை பாதிக்க, அம்மாவுக்காக வீட்டுக்கு வரும் விஜய், குடும்பத்தில் பணம் இருந்தும் அன்பு இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார். மேலும், வில்லன் பிரகாஷ் ராஜ் பிசினசை கெடுக்க, குடும்பம், பிஸ்னஸ் என அனைத்தையும் சரி செய்கிறார்.


இந்த படத்தில் விஜய் சற்று வித்தியாசமான பாடி லாங்குவேஜ், ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் புகுந்து விளையாடி உள்ளார்.பல இடங்களில் செண்டிமென்ட் காட்சியில் விஜய் அனைவரையும் கதறி அழவைத்துள்ளார். இப்படத்தின் தமிழ் பதிப்பு கடந்த புதன் கிழமை ஜனவரி 11ந் தேதி வெளியானது. இப்படத்தை தளபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரிசுடு இன்று திரையரங்கில் வெளியானது. இப்படத்தை இயக்குநர் வம்சி தனது அம்மா, அப்பா, மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் திரையரங்கில் பார்த்தார். இப்படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன வம்சியின் தந்தை மகனை தட்டித்தழுவி அரவணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.


மிகவும் உணர்ச்சிப்பூர்வமான இந்த தருணத்தை வம்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இன்று எனது "அப்பா  படம் பார்த்து நெகிழ்ந்து போனார்" இதுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை. இது நாள் என் வாழ்நாள் முழுவதும் போற்றப்படும் தருணம்.. "நீ தான் என் ஹீரோ நான்னா"...லவ் யூ என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement