கடந்த சில ஆண்டுகளில் விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால் அது லியோ தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவரை முற்றிலுமாக மாற்றி நடிக்க வைத்திருந்தார்.
அதே போல் லியோ படத்தில் விஜய்யை எப்படி காட்டியுள்ளார் என பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான பிக்பாஸ் ட்ரெய்லர் கூட ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அத்தோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
அத்தோடு லியோ ட்ரெய்லரில் விஜய் கெட்டவார்த்தை பேசியிருக்கிறார் என பல சர்ச்சைகள் கிளம்பின. ஆனால் விஜய்யை கெட்ட வார்த்தை பேசச் சொன்னதே நான் தான் என லோகேஷ் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
மேலும் அண்மையில் விஜய்க்கும் லோகேஷிற்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதால் தான் லோகேஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலிருந்து லியோ என்ற வார்த்தையை நீக்கியதாக கூறப்பட்டது.இந்த சர்ச்சை பற்றி ட்விட்டரில் ஒரு நபர் பதிவிட்டு இருந்த நிலையில் அந்த ட்விட்டை இயக்குநர் விக்னேஷ் சிவன் லைக் செய்து இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
'நான் அந்த பதிவில் லோகேஷ் வீடியோ இருந்ததை பார்த்தவுடன் லைக் செய்துவிட்டேன். அதில் என்ன இருக்கிறது என படிக்கவில்லை. இது என் தவறு தான்.''இதற்காக உலகம் முழுவதும் இருக்கும் தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கிறார்.
#Leo படத்தில் @Dir_Lokesh மற்றும் @actorvijay அவர்கள் இருவருக்கும் நடந்த கசப்பான சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டிய என்னுடைய விளக்கப் பதிவை உண்மை அறிந்த @VigneshShivN அவர்கள் முதலில் லைக் செய்து பின்னர் நீக்கிய காரணம் என்னவோ... 😵🤔 pic.twitter.com/tVKnD0dxnI
Listen News!