சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக காலடி எடுத்து வைத்தவர் விக்னேஷ் சிவன்.இதனை அடுத்து இவர் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரெளடி தான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.இத்திடைப்படம் அவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இதையடுத்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கிய விக்கி, கடந்தாண்டு நடிகை நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார். அந்த சமயத்தில் விக்னேஷ் சிவனுக்கு அஜித்தின் 62-வது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் செம்ம குஷியில் இருந்த விக்னேஷ் சிவன் அப்படத்திற்கான பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு வந்தார். கடந்த ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்குவதாக இருந்தது.
இதனிடையே ஷூட்டிங் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி அப்படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது. விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை நீக்கிவிட்டதாக பின்னர் தெரியவந்தது. இதனால் கடும் அப்செட்டில் இருந்த விக்கி, தற்போது அதிலிருந்து மீண்டு வந்து தனது அடுத்த படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர் அடுத்ததாக லவ் டுடே படத்தில் நாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தான் தயாரிக்க உள்ளாராம். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து மீது லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.தங்களின் சொத்துக்களை தங்களுக்குள்ளே தெரியாமல் விக்னேஷ் சிவனின் தந்தை அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!