• Sep 20 2024

அசைக்கமுடியாத உச்சத்தில் அட்லீயின் மார்க்கெட்.. அடுத்த படத்திற்கு இத்தனை கோடிகள் சம்பளமா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கருக்கு அசிஸ்டன்ட் ஆக இருந்து அதன் பின் தனியாக படங்கள் இயக்கி தொடர் ஹிட் கொடுத்து, தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் அட்லீ.

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான அட்லீ, நடிகர் விஜயை வைத்து பிகில், மெர்சல், தெறி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார்.

இவர் இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை செய்தது. இதன் காரணமாக அட்லீயின்  மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது.


ஜவான் படத்தை தொடர்ந்து ஹாலிவுட் பக்கம் படங்களை இயக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.

அதன்படி, அட்லீயின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்திற்கு அட்லீயின் சம்பளம் சுமார் 60 கோடி ரூபாய் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது ஏனைய இயக்குனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் தான் அதிக சம்பளம் பெற்று வந்த நிலையில், அவரது சிஷ்யனாக பணிபுரிந்த அட்லி தற்போது அதிக சம்பளம் பெறுவது வியக்கத்தக்க ஒரு விடயம் ஆகும்.


Advertisement

Advertisement