• Sep 21 2024

விஷ்ணுகாந்த்துடன் விவாகரத்து..? ரவியுடன் காதல் கலாட்டா... சர்ச்சைக்கு மத்தியில் வேறோர் ஆணுடன் வீடியோ வெளியிட்ட சம்யுக்தா... கடுப்பான ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்த பிரபல சீரியல்களில் ஒன்று 'சிப்பிக்குள் முத்து'. இதில் நடித்து பிரபலமானவர் தான் சம்யுக்தா. இவர் தன்னுடன் இந்த சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தத்தை காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.


இப்படி ஒரு நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் சமீபத்தில் பிரிந்து விட்டனர். பிரிவிற்காக இவர்கள் இருவரும் மாறி மாறிக் கூறி வரும் காரணங்கள் மற்றும் குற்றச் சாட்டுக்கள் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த பிரிவிற்கு முக்கிய காரணம் சம்யுக்தாவுடன் இணைந்து 'நிறைமாத நிலவே' சீரியலில் நடித்த ரவி தான் என்றும் ஒரு தகவல் வெளியானது.


இந்நிலையில் சம்யுக்தா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் ஒருவருடன் இணைந்து "வட் சுங்கா" பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "ஆரம்பத்தில் இப்படித்தானே ரவியுடன் இணைந்து வீடியோக்கள் பதிவிட்டு பின்னர் காதல் சர்ச்சையில் சிக்கினீர்கள், தற்போது மீண்டும் ஒருவருடன் ரீல் பண்ண ஆரம்பித்து விட்டீர்களா" எனக் கேட்டு கடுப்பாகியுள்ளனர்.  


Advertisement

Advertisement