தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்த இவர் இன்று திரையுலகின் வெற்றி நாயகனாகத் திகழ்ந்து வருகின்றார். இவரின் நடிப்பிற்கும், நடனத்திற்கும் மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம்.
இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது 'வாரிசு' படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் அடுத்த மாதம் நிறைவடைகிறது. மேலும் இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் 'தளபதி 67' உருவாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நடிகர் விஜய்யின் நடிப்பில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'வேட்டைக்காரன்'. பி.பாபுசிவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து அவரிற்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். இப்படத்திற்காக நடிகர் விஜய் சன் டீவியில் ஒளிபரப்பான பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த பேட்டியை மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் மகள் திவ்யா தனது தந்தை விஜய்க்கு போன் கால் செய்து பேசினார். அதில் அவர் தனது தந்தையிடம் "எப்போ டாடி வீட்டுக்கு வருவீங்க?" என்று கேட்டிருக்கின்றார். அதற்கு விஜய் "ப்ரோகிராம் முடிஞ்சதுமே அப்பா வந்திடுவேன்" எனக் கூறியிருக்கின்றார். அதுமட்டுமல்லாது திவ்யா அழகான பாடல் ஒன்றினையும் தனது மெல்லிய குரலில் பாடி அனைவரையும் வசீகரித்திருக்கின்றார்.
இந்த நிகழ்ச்சியானது பல வருடங்களுக்கு முன் நடைபெற்றிருந்தாலும், அந்த க்யூட் வீடியோ ஆனது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!