விஜய் டிவியின் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றிகரமாக செல்வதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் டிஜே பிளாக். இவர் ரியாலிட்டி ஷோக்களின் போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பிண்ணனியில் வடிவேலு மற்றும் கவுண்டமணி போன்றவர்களின் குரல்களை ஒலிக்க விட்டு அவர்களை கலாய்ப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார்.
இது ரியாலிட்டி ஷோக்களின் சுவாரசியத்தை இன்னும் அதிகமாக்கியது. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரின் பங்கு அளப்பரியது. அந்த நிகழ்ச்சி இவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று சொன்னால் அதற்கு முக்கிய காரணம் டிஜே பிளாக் என்றும் கூறலாம். அதேபோல் சூப்பர் சிந்த நிகழ்ச்சியிலும் டிஜே பிளாக் போட்டியாளராக இருக்கும் பூஜா வரும்போது அவருக்கு ஏற்றார் போல பின்னணியில் பிக்கப் லைன்களை போடுவார்.
இதனால் கடந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்த பூஜாவின் உறவினர்கள் டிஜே பிளாக்கை ப்ராங் செய்திருந்தனர். இது ரசிகர்களிடையேயும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் டிஜே பிளாக் புத்தம் புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இவருடன் மாகாபா ஆனந்த் பிரியங்கா ஆகியோரும் இதில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!