தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹிட் பாடல்களை எழுதியவர் தான் கவிஞர் சினேகன். இவர் கவிஞராக இருந்தாலும் பிக்பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராகப் பங்கு கொண்ட பின்னரே யாவராலும் அறியப்பட்டார்.
பிக்பாஸைத் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு பிஸியாக இருந்தார். அதன்பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், ஆனால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
இவர் பிரபல சீரியல் நடிகையான கன்னிகாவைத் திருமணம் செய்துள்ளார். கன்னிகா சீரியல் நடிகையாக மட்டுமல்லாது சிறப்பாக ஓவியம் வரையக் கூடியவராகவும் காணப்படுகின்றார்.
இந்த நிலையில் சினேகனிடம் தான் வரைந்த ஓவியத்தை கன்னிகா காட்ட, அவரோ தனது ஆசை மனைவிக்கு முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உடனே கன்னிகா கோபப்பட்டு முத்தம் எல்லாம் லைவ் வீடியோவில் கொடுக்காதீர்கள், நான் வீடியோ விட மாட்டேன்.
கமெண்ட்ஸில் வந்து தப்பு தப்பாக பேசுவார்கள் என கூறி கட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!