• Nov 10 2024

தைரியம் இருந்தா இதை பண்ணுங்க.. லைவில் ஓப்பனாக பேசிய ஜூலி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் இவர் பேசிய வசனங்கள் இவரை ஒரு வீர மங்கையாக தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டியது. பலரும் ஜூலியை கொண்டாட ஆரம்பித்தனர்.

இந்நிலையில்தான் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த பிக் பாஸ் போட்டிக்கு ஜூலி தேர்வானார்.

பிக் பாஸ் முதல் சீசனில் தனது பெயரை அதிகம் டேமேஜ் செய்து கொண்டார். அதனால் அவரை அதிகம் அளவு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். ஆனால் அந்த நிலையில் சமீபத்தில் ஓடிடியில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூலமாக சற்று மாறி இருக்கிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவ்வாறு இருக்கையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஜூலியை பற்றி பல கேள்விகள் கேட்டு வந்தனர். அதில் ஒவ்வொன்றாக ஜூலியும் பதிலளித்து வந்தார். அப்போது சில ரசிகர்கள் ஜூலியை கேலி செய்யும் விதமாக பல கமெண்டுகள் செய்து வந்துள்ளனர்.

மேலும் அதைப் பார்த்த ஜூலி அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தைரியம் இருந்தால் உங்களுடைய ஒரிஜினல் முகம் உள்ள புகைப்படத்தை வையுங்கள். அதற்குக் கூட உங்களுக்கு தைரியம் இல்லை அடுத்தவர்களை கேலி செய்ய வந்து விட்டீர்கள் என ஜூலி கேட்டுள்ளார்.

தற்போது இந்த பதிவு பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இதை தொடர்ந்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தைப் பார்த்து தான் வியந்ததாகவும், மேலும் இந்த படக்குழுவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் ஜூலி.

Advertisement

Advertisement