இந்திய சினிமாவில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு அதிகமான ஆபாச காட்சிகளும், நிர்வாணக் காட்சிகளும் தலைவிரித்து ஆடுவதாக ஏகப்பட்ட புகார்கள் குவிந்த வாறு இருக்கின்றன.முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களில் கெட்ட வார்த்தை பேசுவது மற்றும் அத்துமீறிய கவர்ச்சி காட்டி நடிப்பதும் அதிகரித்து விட்டது.
பெண்கள் மட்டும் பிகினி உடைகளை அணிந்தும், டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்தும் புகைப்படங்களைப் பதிவிட்டு இருந்தனர்.இவர்களைப் போல ஆண்கள் ஆடை அணியாமல் நிர்வாணமாக போட்டோஷுட் எடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.
அந்த வகையில் லைகர் படத்தில் ஆடையே அணியாமல் அந்த இடத்தை ரோஜா பூங்கொத்தை வைத்து மறைத்துக் கொண்டு விஜய் தேவரகொண்டா வெளியிட்ட போட்டோக்கள் வைரலாகி வந்தன.இதனைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன் கணவர் ரன்வீர் சிங், பிறந்த மேனியாக எதையுமே வைத்து எந்த இடத்தையுமே மறைக்காமல் அப்படியே குப்புறப் படுத்தப்படி பேப்பர் மேகஸினுக்காக கொடுத்த போட்டோஷூட்டும் வைரலாகி வந்தது.
ரன்வீர் சிங்கின் டிரெண்டிங்கில் தானும் இணைந்து கொள்கிறேன் என படுக்கை அறையில் படு ஆபாசமாக போட்டோக்களை எடுத்து வெளியிட்ட விஷ்ணு விஷாலை தமிழ் சினிமா ரசிகர்கள் கேவலமாக திட்டித் தீர்த்து விட்டனர். ரன்வீர் சிங்கை பார்த்து நடிகைகள் கமெண்ட் போட்டது போல இங்கே யாருமே விஷ்ணு விஷாலின் நிர்வாண போட்டோக்களை சீண்டவே இல்லை.
ராட்சசன், எஃப்.ஐ. ஆர் என நல்ல நல்ல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வந்த விஷ்ணு விஷால், ஏன் இப்படியொரு காரியத்தை செய்தார் என அவரது ரசிகர்களே அவர் மீது ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். பாலிவுட் நடிகர்கள் செய்யும் பைத்தியக்காரத்தனங்களை நாமும் செய்ய வேண்டுமா? கொஞ்சமாவது பொறுப்புணர்வு இருக்க வேண்டாமா? என்றும் விளாசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நடிப்பை தாண்டி இப்படியான தொழிலும் ஈடுபடுகின்றார்களா தமிழ் நடிகர்கள்..!
- நடிகை சத்யாபிரியா மகளா இது-அடேங்கப்பா பார்க்க சினிமா நடிகை போல இருக்கிறாரே
- விஜய்யின் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு வேடமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!