• Sep 20 2024

நீங்களா அதுக்கு காசு குடுத்தீங்க…ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த குஷ்பூ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பூ. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தவர்.

வெள்ளி திரையை தொடர்ந்து சின்ன திரையிலும் மின்னிய குஷ்பூ, தற்போது பாஜகவில் இணைந்து முழு நேர அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார்.நடிகை குஷ்பு அரசியலில் இறங்கியதில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளில் சில காலம் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் பாஜகவில் ஐக்கியம் ஆனார்.

மேலும் எந்த கட்சியிலும் கடுமையாக உழைக்காமல் பதவிக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பதுதான் குஷ்புவின் வழக்கம் என்று கேலிகளும் மீம்ஸ்களும் பரவின. பாஜகவில் அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார்.

அத்தோடு தோல்வியால் துவண்டிருந்த அவர் பாஜகவில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என ஆசையில் இருந்துள்ளார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் சின்னத்திரையில் மெஹா தொடர் ஒன்றில் நடித்து வருகின்றார். குஷ்பூ சமீபமாக உடலை வெகுவாக குறைத்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் கோல்டன் நிற உடையில் குஷ்பூ ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் கமெண்ட் செய்த ஒருவர் “அழகாகதான் இருக்கிறீர்கள்.

இதன் பின்னர் ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி, தோல் திருத்தம் போன்றவற்றை செய்ய வேண்டும். வயதானாலும் உங்கள் இயற்கை அழகுடன் இருக்கலாமே” என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலடி கொடுத்த குஷ்பூ “நீங்கள்தான் அதுக்கு காசு குடுத்தீங்களா மை டியர்? மற்றவர்களை துன்புறுத்தி அடையும் சந்தோஷத்தில் உங்களுக்கு என்ன கிடைக்குது என்று தெரியவில்லை. உங்களை நினைச்சா அவமானமா இருக்கு” என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement