தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குநராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பா ரஞ்சித். மேலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன், அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.இப் படத்தில் கலையரசன் சினிமாவில் எப்படியாவது பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டுமென்ற கனவுடன் சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வருகிறார்.இதன் பின் அவர் அங்கு ஒரு நாடக குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். அப்போது குழுவிலுள்ள நபர்களுடன் கரையரசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது. இருந்தாலும், கரையரசன் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வருகின்றார். திடீரென்று ஒரு நாள் நாடக குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடக்கிறது.
இதற்கிடையே ரெனே- இனியன் இருவரும் காதலித்து வருகிறார்கள். திடீரென்று அவர்களுடைய காதல் பிரேக்கப் ஆகிறது.மேலும் இப்படி பல கிளை கதைகளாக நட்சத்திரம் நகர்கிறது படம் சென்று கொண்டிருக்கின்றது. எனினும்இறுதியில் கரையரசனின் அரசியல் நாடகம் நடத்தப்பட்டதா? கரையரசனுக்கு என்ன ஆனது? ரெனே-இனியன் காதல் என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதி கதை ஆக உள்ளது.இப் படத்தில் காதலுக்கு பாலின வேதங்கள், ஜாதி மதங்கள், எல்லாம் கிடையாது என்பதை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குநர்.மேலும் இப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றது.
அத்தோடு , பா.ரஞ்சித் படங்களில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் எப்போதும் தைரியசாலியாகவும், எதையும் துணிந்து, தனித்து செய்யும் வல்லமை படைத்தவர்களாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு துணிச்சல் மிக்க பெண்ணாக ரெனே என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் துஷாரா விஜயன்.எனினும் இதற்கு முன்பு சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் பாராட்டப்பட்ட துஷாரா அதைவிட கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரத்தை இந்த படத்தில் ஏற்று தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
குறிப்பாக, இந்த படத்தின் ஒரு நட்சத்திரமாகவே அவர் மின்னுகிறார். இப் படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இளையராஜா பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதே போல புத்தர் சிலை, மாட்டுக்கறி, சாதி அரசியல், காட்டுப்பூனை, நாட்டுப்பூனை என பா ரஞ்சித்தின் அரசியலும் அதற்கான வசனங்களும் கவனத்தை பெறுகின்றது. இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மேலும் அதில் அவர் கூறியிருந்தது, ரஞ்சித் சாருக்கு ரொம்ப நன்றி கூறு வேண்டும். இந்த படத்திற்காக ஏழு வருடங்கள் காத்திருந்தேன். ரொம்ப மன நிறைவாக சந்தோஷமாக இருக்கிறேன்.
மேலும் இந்த அளவிற்கு என்னை மக்கள் மத்தியில் பிரபலமாகியதற்கு ரஞ்சித் சாருக்கு தான் நன்றி சொல்லணும்.இப் படத்தில் பீப் கறி பத்தி பேசியிருப்பது பொதுவான விஷயம்தான். அதுவும் ஒரு வகை உணவு தானே. சிக்கன் மாதிரி அதுவும் ஒரு வகையான உணவு. நான் எல்லாம் சாப்பிடுவேன். தயிர் சாதம் பிடிப்பவர்கள் தயிர் சாதம் சாப்பிடலாம். பீப் சாப்பிடுபவர்கள் பீப் சாப்பிடலாம் என்று தான் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றும் சர்ச்சையாக கூடிய அளவிற்கு எதுவும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
Listen News!