• Sep 21 2024

மக்களின் கலாச்சார உணர்வு உங்களுக்கு வேடிக்கையா?-குக்வித் கோமாளியில் காந்தாரா கெட்டப்- கடுப்பான ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில்  ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.தற்பொழுது இதன் 4 வது சீசன் ஆரம்பித்துள்ளது.

 மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக ப்ரொமோட் ஆகி இருக்கிறார். இந்த சீசனில் புகழ், குரேஷி, மணிமேகலை, சுனிதா என்று புகழ், சில முன்னாள் கோமாளிகள் மட்டுமே இருக்கின்றனர். ஆனால், கடந்த மூன்று சீசன்களை விட இந்த சீசன் பார்வையாளர்களை கவரவில்லை.


 அதிலும் புகழின் காமெடிகள் பார்வையாளர்களை கொஞ்சம் சலிப்படைய செய்து இருக்கிறது.  இந்த சீசனில் புகழிக்கு ஆரம்பத்தில் இருந்தே நெட்டிசன்களின் விமர்சனங்கள் வரத்துவங்கிவிட்டது. 

 இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் கெட்டப் ரவுண்டில் புகழ் காந்தாரா கெட்தாப்பை போட்டு வந்துள்ளார். அதை பார்த்த vj விஷால் கண் கலங்கி இருக்கிறார்.


இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகார்கள் பலர் குக்வித் கோமாளிக்கு எதற்கு காந்தாரா கெட்டப் என்று கமென்ட் செய்து வருகின்றனர். மேலும், சிலரோ காந்தாரா  மக்களின் கலாச்சார உணர்வை போற்றும் ஒரு படம். அப்படிபட்ட கதாபாத்திரத்தை எதற்கு வேடிக்கையாக்குகிறீர்கள் என்று கொந்தளித்து வருகின்றனர். ஏற்கனவே ராஜா ராணி 2வில் சித்து, காந்தாரா கெட்தாப்பை போட்டு நடித்து இருந்தது பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.








Advertisement

Advertisement