• Nov 19 2024

உனக்கு மண்டையில பிரச்சினையா- திருச்சிற்றம்பலம் பட ரஞ்சினி கதாப்பாத்திரத்தை வேற லெவலில் ரோஃல் செய்த நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஆகஸ்ட் மாதம்  18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தை இயக்குநர்  மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்ததோடு சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்திருந்தார் என்பதும் முக்கியமாகும்.

இப்படத்தில் இவருடன் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடித்துள்ளனர்


இப்படத்தின் தமிழக உரிமையை  ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றினார். இந்த படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியானது.இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் 'ரஞ்சனி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ‌.இந்நிலையில்  ப்ரியா பவானி சங்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், திருச்சிற்றம்பலம் படத்தில் இவர்நடித்துள்ள ஒரு எமோஷனல் காட்சியை, ரசிகர்கள் வேறு ஒரு டிரெண்ட்டான (உனக்கு என்ன பிரச்சினை) வசனத்தை வைத்து Synchronisation செய்துள்ளனர். இந்த Sync வீடியோவை பகிர்ந்து, "வேற லெவல் Sync" என பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement