தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்ற பட்டத்தோடு காமெடி மற்றும் காதல் திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் ஆர்யா. இவர் சார்பாட்டா என்னும் திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் நடிகராக மாறியுள்ளதோடு இவருடைய படங்களுக்குமான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அந்த வகையில் இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன்.இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஆர்யா உடன் இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக ஆர்யா நடித்துள்ளார். கேப்டன் வெற்றிச் செல்வன் எனும் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 8 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்ரன் கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் டாக்டர் கீர்த்தி எனும் ராணுவ டாக்டராக நடிகை சிம்ரன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!