தமிழ் திரையுலகில் அபாரமான உடல்மொழி கொண்ட வெகுசில நடிகர்களில் ஒருவரும், தனது நகைச்சுவை திறனால் திரையிலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருப்பவர் தான் வடிவேலு.
80 மற்றும் 90களில் நகைச்சுவை என்றாலே கவுண்டமணி - செந்தில்தான் என்று இருந்த நிலையில், சிறு சிறு வேடங்களில் நடித்து தனது திறமையை உலகுக்கு காட்டி படிப்படியாக தனக்கென ஒரு இடத்தை நிறுவினார் வடிவேலு.
இடையில் சில காரணங்களால் நடிக்காமல் இருந்தவர் இப்போது மீண்டும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.அதன் படி அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சீரியசான கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.
இது தவிர சந்திரமுகி 2 திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் நேற்றைய தினம் தன்னுடைய 63வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சென்னையில் மட்டும் இரண்டு வீடு உள்ளது.இந்த வீட்டின் மதிப்பு மட்டும் கோடி என்றும் இரண்டு ஆடி கார், பிஎம்டபிள்யூ, டொயோடோ என 4 சொகுசு கார்களை வைத்து இருக்கிறார். அதேபோல் இவருக்கு மதுரையில் ஒரு வீடும், 20 ஏக்கர் சிலமும் உள்ளதாம்.இப்படி நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மட்டுமே சுமார் ரூ. 130 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
Listen News!