• Sep 20 2024

தனி ஆளாக வாழும் அமலாபாலின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிந்துபாத் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அமலாபால். இதனைத் தொடர்ந்து மைனா என்னும் படத்தின் மூலம் பிரபல்யமானார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததன் பல விருதுகளையும் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அதர்வா ஆர்யா விஜய் தனுஷ் விஷ்ணு விஷால் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் இயக்குநர் ஏ.எல் விஜய்யைக் காதலித்து திருமணம் செய்தார். திருமணத்தின் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார்.

இதனைத் தொர்ந்து மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார்.அவரது நடிப்பில் வெளிவந்த ஆடை படம் நடிகைக்கு நல்ல விமர்சனத்தை கொடுத்தது.

எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
தற்போது விவாகரத்துக்கு பிறகு தனியாக வாழ்ந்து வரும் அமலாபாலின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 29 கோடி இருக்கும் என கணிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement