சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். அதன் பிறகு ஆகாஷுடனான மணமுறிவு, ஆனந்தராஜுடன் இரண்டாவது திருமணம் என லைம் லைட்டில் இருந்தார் வனிதா.
இதைத் தொடர்ந்து அவர் தனது தாய் மஞ்சுளா, தந்தை விஜயகுமார் ஆகியோருடன் சொத்து தகராறின்போது அதிகம் பேசப்பட்டவர் வனிதா விஜயகுமார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் .
இதைத் தொடர்ந்து அவரது மீடியா வாய்ப்புகளும் சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. அந்த வகையில் குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்டு அந்த பட்டத்தை பெற்றார். இதையடுத்து கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடுவராக இருந்து நடத்தினார்.
இதைத் தொடர்ந்து மேக்கப், சமையல் கலை மீது அதிக ஈடுபாடு கொண்ட வனிதா விஜயகுமார், யூடியூப் சேனலை தொடங்கினார். இதன் மூலம் பல டிப்ஸ்களை ரசிகர்களுக்கு சொல்லி வருகின்றார்.
மேலும் தங்க தட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும், ஒரு கட்டத்தில் எந்த சொத்தும் வேண்டாம் என வெளியே வந்து, தன்னுடைய சொந்த உழைப்பால் மகளை நன்றாக வளர்ந்துள்ளது மட்டும் இன்றி, 7.63 கோடி சொத்துக்களை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. சாதிக்க வேண்டும் என்கிற வெற்றி எப்போதுமே தோற்று போகாது என்பதற்கு வனிதா மிகப்பெரிய உதாரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!