• Sep 20 2024

வரலாறு காணாத வசூல் சாதனையை படைக்கப்போகும் 'அவதார் 2'... இதுவரை எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்த படம் என்றால் அது 'அவதார்' தான். அதாவது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹிட் திரைப்படம் தான் 'அவதார்'. அந்தவகையில் உலக சினிமாவில் இதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து, 23 ஆயிரம் கோடிகளை குவித்து உலகில் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படம் தான் இது எனலாம்.


பொறுத்தவரையில் ஒரு சில படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும். அப்படிபட்ட படங்களின் லிஸ்டில் முன்னிலையில் இருப்பது தான் அவதார், இப்படத்தின் உடைய முதல் பாக வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.


'அவதார்-2' திரைக்கு வந்த நாட்களில் இருந்தே வசூல் மழை பொழிந்து வருகிறது. இஅந்தவகையில் ந்தியாவில் முதல் நாளில் மட்டும் ரூ.41 கோடி வசூலித்தது. அத்தோடு சில தினங்களுக்கு முன்பு வசூல் ரூ.7 ஆயிரம் கோடியை எட்டியதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். 


இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் அவதார்-2 படம் ரூ.12 ஆயிரம் கோடியை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் ரூ.400 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement