• Sep 20 2024

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநரின் மகன் என்ற அடையாளத்தோடு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகர் சிம்பு. அதனைத் தொடர்ந்து காதல் அழிவதில்லை என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.இதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

இதனால் ஒரு கால கட்டத்தில் டாப் ஹீரோவாக இருந்த இவர் காதல் சர்ச்சைகள் பலவற்றில் சிக்கியதால் சில காலம் திரைப்பட வாய்ப்பின்றி இருந்தார். இதனையடுத்து இப்பிரச்சினைகள் எல்லாம் முடிவடைந்த நிலையில் தற்பொழுது ரி என்ட் ரி கொடுத்து நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் நல்ல ஒரு வெற்றியைப் பெற்றுக் கொடுத்து சிறந்த நடிகனாக அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படமும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனை அடுத்து பத்துத் தல என்னும் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இப்படத்திற்காக தனது உடல் எடையையும் அதிகரித்து உள்ளார். இவ்வாறு ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ள அவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 150 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இது குறித்த சரியான தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement