பாலிவூட் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அக்ஷய் குமார்,இவர் அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை கதாபாத்திரம் என நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தமிழில் இறுதியாக ஷங்கர் நடிப்பில் வெளியான எந்திரன் 2.0 திரைப்படத்தில் வில்லனாக பக்ஷிராஜன் என்ற வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அக்ஷய் குமாரின் நடிப்பில் கடைசியாக ஓஎம்ஜி 2 படம் வெளியானது. இப்படத்தில் பாலியல் கல்வி தொடர்பான இந்தப் படத்தில் இந்து கடவுள்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக கூறி இந்த படத்துக்கு சில வட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படத்தை திரையிடக்கூடாது என கூறி தியேட்டரில் அக்ஷய் குமாரின் உருவ பொம்மை எரித்தனர்.
இதனை அடுத்து தி கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ என்ற படம் அக்டோபர் வெளியாக உள்ளது. ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்க விபத்தை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளது இப்படம். இந்த நிலையில் இன்று அக்ஷய் குமார் தன்னுடைய 56வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார்.இதனால் இவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அக்ஷய் குமாரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.742 கோடி என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரின் ஆண்டு வருமானம் மட்டும், ரூ 80 கோடி என்றும், படத்திற்காக அவர் வாங்கும் சம்பளம் 40 கோடியாவும், விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் பல கோடி வருமானம் வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரியல் எஸ்டேட்டில் தனது பணத்தை முதலீடு செய்துள்ள அக்ஷய் குமார், மும்பை ஜூஹூவில் கடல் நோக்கிய டூப்ளெக்ஸில் வசிக்கிறார். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.7.8 கோடி இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீட்டை தவிர மும்பையில் அவருக்கு மேலும் நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!