• Sep 21 2024

ப்ரீ புக்கிங்கில் ஜெயிலரை அடிச்சுத் தூக்கப்போகும் லியோ... இதுவரை எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக தயாராகி இருக்கும் திரைப்படம் லியோ. இப்படமானது அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் மற்றும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும் .


இப்படத்தின் கதாநாயகனாக விஜய் நடிக்க அவருடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத் , அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் 1மாதம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்னரே சாதனை படைத்து மாஸ் காட்டி வருகின்றது. அந்தவகையில்  கடந்த ஜனவரி மாதம் வெளியான வாரிசு திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் UK-வில் முதல் நாள் ரூ 1.63 கோடி மட்டுமே வசூல் செய்தது. 

ஆனால் தற்போது லியோ படம் UK-வில் மட்டும் ரூபாய் 1.75 வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனை வைத்து பார்க்கும் போது ஜெயிலர் பட வசூலை லியோ படம் முறியடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisement

Advertisement