• Sep 20 2024

நாளுக்கு நாள் எகிறும் 'மார்க் ஆண்டனி' வசூல்... இதுவரை எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைப்பதோடு வினாத்குமார் இப்படத்தை தயாரிக்கின்றார். இப்படத்தில் விஷாலுடன்  எஸ்.ஜே சூர்யாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


அத்தோடு இயக்குநர் செல்வராகவனும் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில், டைம் ட்ராவல் ஆக்‌ஷன்மற்றும் காமெடி கலந்த கலவையாக உருவாகியுள்ளது.

இந்தத் திரைப்படமானது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 40 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படமானது வெளியாகி தற்போது மூன்று நாட்களைக் கடந்துள்ளது.


இந்நிலையில் மூன்றாவது நாளில் 12 முதல் 15 கோடி ரூபாயினை இப்படம் வசூல் செய்துள்ளது. அந்தவகையில் முதல் மூன்று நாட்களில் 35 முதல் 40 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. என இதை வைத்து பார்க்கும் போது மார்க் ஆண்டனி பட வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை தெளிவாகின்றது.

Advertisement

Advertisement