சினிமா ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்த படம் என்றால் அது 'அவதார்' தான். அதாவது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹிட் திரைப்படம் தான் 'அவதார்'. அந்தவகையில் உலக சினிமாவில் இதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து, 23 ஆயிரம் கோடிகளை குவித்து உலகில் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படம் தான் இது எனலாம்.
உலக சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும். அப்படிபட்ட படங்களின் லிஸ்டில் முன்னிலையில் இருப்பது தான் அவதார், இப்படத்தின் உடைய முதல் பாக வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
வெளியான நாள் முதல் இப்படமானது வசூலை வாரிக் குவித்த வண்ணமே இருக்கின்றது. அந்தவகையில் 25 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கின்றது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி வெளியான இப்படம் இதுவரை இதுவரை இந்தியாவில் மட்டுமே ரூ. 235 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரிலீசுக்கு பின் சற்று பின்தங்கி இருந்த இப்படத்தின் வசூல் கிறிஸ்மஸ் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு மீண்டும் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது.
Listen News!