• Sep 21 2024

நினைத்துப் பார்க்க முடியாதளவிற்கு வசூல் சாதனையில் 'அவதார் 2'... இதுவரை எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹிட் திரைப்படம் தான் 'அவதார்'. அந்தவகையில் உலக சினிமாவில் இதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து, 23 ஆயிரம் கோடிகளை குவித்து உலகில் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படம் தான் இது எனலாம்.


இருப்பினும் உலக சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும். அப்படிபட்ட படங்களின் லிஸ்டில் முன்னிலையில் இருப்பது தான் அவதார், இப்படத்தின் உடைய முதல் பாக வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் எல்லா நாடுகளில் வெளியாகி இருந்தது. 

அந்தவகையில் 25 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் நாளில் இந்திய மதிப்பில் ரூ. 800 கோடி வரை  வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் இந்தியாவில் மட்டுமே ரூ. 55 கோடி வரை வசூலித்தது என சொல்லப்படுகின்றது. 


மேலும் படம் வெளியாகி தற்போது 12 நாட்கள் ஆன நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 8000 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு வரும் நாட்களில் கண்டிப்பாக படம் நல்ல வசூலை பெறும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement