மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர். அத்தோடு இவர்களுடன் இணைந்து வடிவேலு, ஃபஹத் ஃபாசில், லால் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பலத்த விமர்சனங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் இப்படமானது கடந்த ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்தப் படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்தவகையில் இப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 48 கோடி வரை வசூல் செய்துள்ளதோடு வெளிநாடுகளில் 13 கோடியும் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
Listen News!