• Sep 20 2024

வசூலில் மாஸ் காட்டும் ஜவான்... இதுவரை எத்தனை கோடி தெரியுமா.. வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை அட்லீ வேற லெவலில் இயக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார் அட்லீ. பாலிவுட் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் எதிர்பார்க்க வைத்தது இவரின் ஜவான் திரைப்படம். 


அதன்படி, செப்டம்பர் 7ம் தேதி வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலரும் ஷாருக்கானுடன் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையும் இந்தப் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.


இந்நிலையில் ஜவான் திரைப்படம் வெளியாக்கு தற்போது 4நாட்களைக் கடந்துள்ளது. 4 நாட்களில் அதிகாரப்பூர்வமாக ஜவான் பெற்ற வசூல் எவ்வளவு என்பதனை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் 520.79 கோடி ரூபாய் என என தற்போது ரெட் சில்லீஸ் வெளியிட்டுள்ளது.


Advertisement

Advertisement