• Nov 14 2024

ஜப்பானில் மாபெரும் சாதனை புரிந்த 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம்... எத்தனை கோடி வசூல் தெரியுமா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாகுபலி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயங்கிய தெலுங்கு சினிமாவின் வெற்றி இயக்குநரான எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட படைப்பு தான் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம்.


இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். அத்தோடு அவர்களுடன் இணைந்து ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி எனப் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். தெலுங்கில் தயாராகி தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியிடப்பட்ட இப்படம் மாபெரும் வசூல் சாதனையையும் நிகழ்த்தியது.


பொதுவாகவே இந்தியாவில் வெளியாகின்ற தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் 'ஆர் ஆர் ஆர்' படத்தையும் ஜப்பானில் வெளியிட்டனர். அதாவது இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றதும் ஜப்பானியர்கள் இந்தப் படத்தை ஆர்வமாக பார்த்தனர். 


அந்தவகையில் ஜப்பானில் 44 நகரங்களில் 209 தியேட்டர்களில் ஆர் ஆர் ஆர் படம் திரையிடப்பட்டது. அத்தோடு 31 ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் திரையிடப்பட்டன. இந்த நிலையில் ஜப்பானில் மட்டுமே ஆர் ஆர் ஆர் படம் 200 நாட்கள் ஓடி ரூ.119 கோடி வசூலித்து சாதனை புரிந்து உள்ளது. 

இதனையடுத்து ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற பெருமையை ஆர் ஆர் ஆர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement