• Sep 20 2024

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூரியின் 'விடுதலை'... 11நாட்கள் முடிவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநராக இருந்து வருபவர்  வெற்றிமாறன். இவர் இயக்கிய பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் அவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தில் சூரி காவலராகவும், விஜய் சேதுபதி வாத்தியார் பெருமாள் கதாபாத்திரத்திலும் நடித்திருகிறார். 


இப்படமானது இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில் கடந்த வாரம் வெளியான முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாம் பாகம் இன்னும் 3 அல்லது 4 மாதத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கின்றது.


இந்நிலையில், இப்படம் வெளிவந்து தற்போது 11 நாட்களைக் கடந்துள்ள நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Advertisement

Advertisement