• Sep 21 2024

'கங்குவா' படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம் தான் 'கங்குவா'. இப்படமானது பெரும் பொருட் செலவில் பான் இந்தியப் படமாக தயாராகி வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானியும், இன்னொரு ஹீரோயினாக மிருணாள் தாக்கூர் நடிப்பதாக கூறப்படுகின்றது.


மேலும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் குறிப்பாக 13 கதாபாத்திரங்களில் கங்குவா அரசனாக சூர்யா நடிப்பதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. 


அத்தோடு சூர்யாவுக்கு வில்லனாக இப்படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா வாங்கிய சம்பள விபரம் குறித்த தகவல் ஒன்றும் தற்போது வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் இப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா 50கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கின்றாராம். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இன்னும் அதிகமாகியுள்ளது.

Advertisement

Advertisement