"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்.." என்ற பாடலுக்கு அமைய பல ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவினுடைய சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிறியோர் முதல் பெரியோர் வரை இவருக்கு இருக்கும் ரசிகர்களோ ஏராளம்.
இவர் நடிப்பில் உருவாகும் படங்களில் அதிகளவான படங்கள் வெற்றிப் படங்காளாகவே அமைந்துள்ளன. அவ்வாறான படங்களில் ஒன்று 'முத்து'. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்திலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பிலும் அமைந்த இப்படமானது 1995-ஆம் ஆண்டு வெளிவந்தது.
மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, செந்தில், ராதாரவி, சரத்பாபு உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்து அசத்தியிருந்தனர். மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படமானது உலகளவில் ரஜினிகாந்திற்கு பேரையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது.
அதிலும் குறிப்பாக ஜப்பானில் முத்து படத்திற்கு பிறகு தான் ரஜினிக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. இந்நிலையில் இப்படம் பெற்றுக் கொண்ட வசூல் விபரம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது திரைப்படமானது உலகளவில் ரூ. 44 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.
இதில் இந்தியளவில் மட்டுமே ரூ. 24 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 20 கோடியும் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில் பாக்ஸ் ஆபிஸில் 90ஸ் காலகட்டத்தில் ரஜினிகாந்த் செய்த வசூல் சாதனைகளில் முத்து படம் மறக்க முடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!