• Sep 20 2024

முதல் நாள் வசூலில்... ஈழத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் புரிந்த சாதனை... எத்தனை கோடி தெரியுமா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 4-ஆவது முறையாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். 


மேலும் இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சரவணன், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் நேற்று  உலகம் பூராகவும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.


இப்படமானது வெளியான நேரம் தொட்டு பாசிட்டிவ் விமர்சனங்களை வாரிக் குவித்து வருகின்றது. மேலும் உலகம் பூராகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள ரஜினிக்கு இலங்கையிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.


அந்தவகையில் முதல் நாளில் 'ஜெயிலர்' திரைப்படம் இலங்கையில் செய்த வசூல் விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இலங்கையில் மட்டுமே இப்படம் ரூ 2கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement