தமிழ் சினிமாவின் பிரமாண்ட சாதனை ஆக உருவாகி உள்ள ஒரு படமே 'பொன்னியின் செல்வன்'. அதுமட்டுமல்லாது மணிரத்னம் அவர்களின் பல நாள் கனவும் இப்படத்தின் வாயிலாக நிறைவேறி உள்ளது.
இந்த படத்திற்காக பல வருடங்களாக பலரும் முயற்சி செய்திருந்தார்கள். ஆனால் அவர்கள் யாராலும் முடியாத ஒன்றை இந்த வருடத்தில் ரிலீஸ் செய்து சாதனை படைத்துவிட்டார் மணிரத்னம்.
அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் அவர்களின் காலத்தில் இருந்தே இந்த நாவலை படமாக எடுக்க முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால் மணிரத்னத்தினால் மட்டுமே அது சாத்தியம் ஆகியுள்ளது.
மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ஜெயராம் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
முதல் பாகம் வெற்றிகரமாக ரிலீஸ் ஆக மணிரத்னம் அவர்கள் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் படமானது வெளியான நாள் முதல் வசூலை வாரிக் குவித்த வண்ணம் தான் இருக்கின்றது. அந்தவகையில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.200 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது.
அத்தோடு இதுவரை கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் தான் தமிழ்நாட்டில் சுமார் ரூ.175 கோடி வரை வசூலித்து அதிகம் வசூல் குவித்த படம் என்ற பெயரோடு இருந்தது. அந்த சாதனையை பொன்னியின் செல்வன் தற்போது முறியடித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் மட்டும் பொன்னியின் செல்வன் ரூ.465 கோடி வசூலித்துள்ளது.
அந்தவகையில் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் நெருங்கி வருகிறது. 2.0 படம் ஆனது இந்தியா முழுவதும் ரூ.508 கோடியும், வெளிநாடுகளில் ரூ.665 கோடியும் வசூலித்து இருந்தது. இந்நிலையில் 2.0 படத்துக்கு பிறகு உலக அளவில் அதிகம் வசூல் பார்த்த இரண்டாவது தமிழ் படம் என்ற பெருமை பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்து உள்ளது.
Listen News!