கேஜிஎப் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சலார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரபாஸ் நடித்திருந்தார். கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் பல பெரிய பட்ஜெட் படங்களில் நடித்த நிலையில் அவை ஹிட் ஆகவில்லை. எனவே சலார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகாகக் காணப்பட்டது.
நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. தமிழில் ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் தெலுங்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
சலார் படம் முதல் நாளில் மட்டும் 175+ கோடி வசூல் செய்திருக்கிறது என தகவல் வந்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் 135 கோடி வசூல் என கூறப்படுகிறது.இந்திய பாக்ஸ் ஆபிசில் பல புது சாதனைகளை சலார் படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!