விஜய்யின் 'பிகில்' படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்து வருகிறார். அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது.
சமீபகாலமாக பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துகொண்டிருக்கும் நிலையில் ‘ஜவான்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து ‘ஜவான்’ படம் செப்டெம்பர் 07-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ப்ரியாமணி இப்படத்திற்காக வாங்கிய சம்பள விபரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்தவகையில் இவர் ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
Listen News!