• Sep 20 2024

சிவகார்த்திகேயனுடன் நடிக்க சமந்தா வாங்கிய சம்பளம்-எத்தனை கோடி தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

மேலும் இவர் நடிப்பில் தற்போது யசோதா, குஷி, சகுந்தலம் என மூன்று திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

தமிழை தொடர்ந்து ஹிந்தியிலும் பல தொடர்ந்து மூன்று படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். நடிகை சமந்தா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் தான் சீமராஜா.

மேலும் இப்படத்தை பொன்ராம் இயக்கியிருந்தார். ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து இப்படம் தோல்வியை சந்தித்தது. இப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ரூ. 18 கோடி சம்பளம் வாங்கியதாக சமீபத்திய செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்க நடிகை சமந்தா ரூ. 1.5 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, தற்போது நடிக்கும் படங்களுக்கு ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம் நடிகை சமந்தா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement