• Sep 20 2024

ஷாருக்கானின் 'பதான்' இதுவரையில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? - வெளியானது முழு விவரம்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ஜீரோ படம் கடைசியாக 2018ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அதன்பிறகு லால் சிங் சத்தா, ராக்கெட்ரி, பிரம்மாஸ்த்ரா போன்ற படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து வந்தாரே தவிர முழு படம் நடிக்கவில்லை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு 2023, ஜனவரி 25ம் தேதி 'பதான்' திரைப்படம் படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படம் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது என்றே சொல்லலாம். ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது.



இதுவரை படம் அதாவது 2 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 235 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement