நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது 'மாவீரன்' திரைப்படம் வெளியாகியுள்ளது. இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படமானது வெளியான நாளிலிருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக்குவித்து வருகின்றது.
அந்தவகையில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த இப்படம் ஆனது வெளியாகி தற்போது 10நாட்கள் ஆகியுள்ளது. இந்த 10நாட்களில் ரூ. 72 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே ரூ. 44 கோடி வரை வசூல் செய்திருக்கின்றது.
இந்த மாபெரும் வெற்றியை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Listen News!