மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் மம்மூட்டி.இவர் 1971ஆம் ஆண்டு வெளியான அனுபவங்கள் பாளிசிக்கல் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்ததால் தமிழ் மற்று் மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
மம்மூட்டியை பொறுத்தவரை தனது நடிப்பில் எந்த விதமான அலட்டலையும் காட்டிக்கொள்ளாதவர். தனது முக பாவனையிலேயே அனைத்தையும் சொல்லி அனைவரையும் கவர்ந்துவிடுவார். அதனால்தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை அவர் பெற்றிருக்கிறார்
மம்மூட்டி ஏராளமான கேரள மாநில அரசின் விருதுகளை பெற்றிருக்கிறார். அதேபோல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஐந்து முறையும் பெற்றிருக்கிறார்.அந்த ஐந்து விருதுகளில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக ஒரு முறை வாங்கினார் . மம்மூட்டியின் நடிப்பில் கடைசியாக கிரிஸ்டோபர் வெளியானது.
இந்நிலையில் இன்று அவர் தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மம்மூட்டிக்கு மொத்தம் 360 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கைராலி டிவியின் ஓனரும் மம்மூட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!