இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகியிருந்த திரைப்படம் தான் ஜப்பான். இப்படத்தில் அனு இம்மானுவேல், சுனில், ஜித்தன் ரமேஷ், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அத்தோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.
நகைக் கடை கொள்ளைகளை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இப்படமானது முழுக்க ஆக்ஷன் மோடில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பான் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் சொல்லிக்கொள்ளும்படி வசூல் இல்லையென சொல்லப்படுகிறது.
கடந்தாண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் வெளியானது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸுடன் மோதிய சர்தார், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது.ஆனால், இந்த தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துடன் மோதிய ஜப்பான், வசூலில் தடுமாறி வருகிறதாம். அதாவது இந்தப் படம் முதல் நாளில் 2.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 1.5 கோடியும், மற்றவை எல்லாம் சேர்த்து 1 கோடி வரையும் கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சென்ற ஆண்டைப் போல, இந்த தீபாவளியும் கார்த்தி தான் பாக்ஸ் ஆபிஸ் வின்னராக மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜப்பான் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களும், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்க்கு பாசிட்டிவான விமர்சனங்களும் கிடைத்துள்ளன. இதனால், வரும் நாட்களிலும் ஜப்பான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பெரியளவில் இருக்காது எனத் தெரிகிறது.
Listen News!