• Sep 20 2024

காதலை மையமாக வைத்து வெளியாகிய குஷி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் இத்திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் உருவான இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில்  பான் இந்தியா படமாக நேற்றைய தினம் வெளியாகியது.

இப்படத்தில் லட்சுமி, Sachin Khedekar, ரோகினி, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்து எதிர்பார்ப்பை வைத்திருந்தனவர்.ஆனால் படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது.


இந்நிலையில், குஷி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் உலகளவில் குஷி திரைப்படம் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ. 1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.


மேலும் குஷி கிளீனான ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உள்ளது. சிம்பிளாக கதையாக இருந்தாலும் நிறைய இடங்களில் நகைச்சுவையாக இருக்கிறது.வழக்கமான ஸ்டோரி என்பதால் சில இடங்களில் படம் நீளமாக இருப்பதை போல தெரிகிறது. இருந்தாலும் காமெடி காட்சிகளும், கடைசி 30 நிமிடம் கிளைமாக்ஸில் எமோஷனல் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது என்றும் ரசிகர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement