இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இருப்பினும் இந்த படம் பல தடைகளைத் தாண்டித் தான் வெளிவந்திருக்கின்றது.
அதாவது கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதனால் இப்படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.
இருப்பினும் வடமாநிலங்களில் இப்படம் வெளியான நாள் முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த வாரம் உலகம் முழுவதும் இப்படத்தினுடைய வசூல் ரூ.100 கோடியை தாண்டிய நிலையில், இப்படம் தற்போது ரூ.171 கோடி வசூலித்து இருக்கின்றது.
இந்த வசூல் நிலை தொடர்ந்தால் வெகுவிரைவில் இப்படம் ரூ.200 கோடி வசூலைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. அத்தோடு இந்தி பேசும் மாநிலங்களில் இப்படம் 19.87 சதவீதம் வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கயத்து.
Listen News!