பான் இந்திய அளவில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் 'கே ஜி எஃப்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து 'சலார்' என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பானது இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு வருவதோடு இதன் முதற்கட்டப்படப்பிடிப்பானது நிறைவடைந்துள்ளது.விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பானது நடைபெறவுள்ளது.
இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
'கே ஜி எஃப்' படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் அடுத்த ஆண்டில் சலாரை வெளியிட தயாராகி வருகிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று 'சலார்' வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே 'சலார்' திரைப்படம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!