எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கென்று தலைமுறைகள் கடந்தும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார் மணிரத்னம்.
அந்தவகையில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இதனையடுத்து சமீபத்தில் வெளியாகியுள்ள அதன் இரண்டாம் பாகம் அந்த வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்துள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 வெளிவந்து தற்போது நான்கு நாட்கள் முடிவடைந்துள்ளது.
இவ்வாறாக 4 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை அதிகாரப்பூர்வமாகவே படக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும் 4 நாட்களில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் 247 கோடி வசூல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வசூல் சாதனை ரூ. 500 கோடியை இப்படம் முறியடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!