• Sep 20 2024

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரீத்து வர்மா, YG மகேந்திரன், சுனில், செல்வராகவன், அபிநயா என பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை மார்க் ஆண்டனி பெற்று வருகிறது.இந்நிலையில், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.


அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி வரை விடுமுறை நாட்கள் என்பதால் கண்டிப்பாக இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிக வசூல் வரும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த எஸ்.ஜே. சூர்யா, இப்படத்தில் நடிக்க  3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement