இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது 'லியோ'. ஃபர்ஸ்ட் ஆப் படு ஃபயராக உள்ள நிலையில், இரண்டாம் பாதியில் பல ட்விஸ்ட் இருந்தாலும், தேவையில்லாத சண்டை காட்சிகள் படத்தின் வேகத்தை பதம் பார்த்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அதே நேரம் இப்படம் LCU லிஸ்டில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ள செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது. இப்படம் முதல் நாளே, வெளிநாடுகளில் மட்டுமே சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், உலக அளவில் 148.5 கோடி ரூபாயை வசூலித்து சாதனைப்படைத்துள்ளது.
இந்நிலையில் லியோ திரைப்படம் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், தமிழில் ரூ48.96 கோடி, தெலுங்கில் ரூ12.9 கோடியும், இந்தியில் ரூ2.8 கோடியும், கன்னடம் ரூ 14 கோடி வசூலாகி உள்ளதாகவும், இந்தியா அளவில் ரூ 36 கோடியை அள்ளி இத்திரைப்படம், உலகஅளவில் ரூ. 100.80 கோடி வசூலை பெற்று இரண்டாம் நாளிலேயே ரூ200கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது.இதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!